இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்..! தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்தது..!

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில்

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில் சென்னையில் கடந்த 3 நாட்களாக ஏற்றம் கண்ட தங்கம் விலை இன்று திடீரென குறைந்துள்ளது.

தங்கம் விலை:

unknown node

சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.240 குறைந்து  ஒரு சவரன் ரூ.44,480-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை :

unknown node

சென்னையில் வெள்ளியின் விலை ரூ.20 காசுகள் அதிகரித்து, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.77.70-க்கு, விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.200 அதிகரித்து ரூ.77,700-க்கு விற்பனையாகிறது.