சென்னை ரயில் நிலையத்தில் ஆந்திராவை சேர்ந்த இருவரிடம் இருந்து 68 லட்ச ரூபாய் ஹவாலா பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொதுவாக ஹவாலா பணம் (வெளிநாட்டு பணம்), தங்கம், வைரம், விலையுயர்ந்த பொருட்களை கடத்துபவர்கள் விமான நிலத்தில் வேறு நாட்டில் இருந்த்து இந்தியா வரும்போது விமானத்துறை அதிகாரிகளால் பிடிபடுவது வழக்கம். ஆனால், தற்போது இந்த சம்பவம் சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்றுள்ளது.
ஆந்திராவை சேர்ந்த சுனில்குமார் எனும் 39 வயது மதிக்கத்தக்க நபரும், அப்துல் ரகுமான் எனும் 22வயது நபரும் இந்திய மதிப்பில் 68 லட்ச ரூபாய் ஹவாலா பணத்தை தங்கள் சட்டைக்குள் மறைத்து வைத்து சென்னை பெரம்பூர் ரயில்நிலையத்திற்கு எடுத்து வந்துள்ளனர்.
இதனை ரயில்வே போலீசார் கண்டுபிடித்து இருவரையும் கைதுசெய்து பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இந்த ஹவாலா பணத்திற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் இருந்ததால் கைப்பற்றப்பட்ட பணம் வருமானவரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.