நேற்று சென்னை வானிலை ஆய்வு மண்டல மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் வெப்பசலனம் மற்றும் லேசான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த இரு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாயப்புள்ளது என கூறினார்.இதை தொடர்ந்து இன்று காலை முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், ஆதம்பாக்கம், பல்லாவரம், கோடம்பாக்கம், அண்ணாநகர் உள்பட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.சென்னையில் சில இடங்களில் கனமழை மற்றும் லேசான மழை பெய்து வருவதால் இன்று வழக்கம் போல பள்ளிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு அதிகாரி அறிவித்து உள்ளார்.
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது ..!
நேற்று சென்னை வானிலை ஆய்வு மண்டல மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் வெப்பசலனம் மற்றும் லேசான காற்றழுத்த தாழ்வு நிலை