#Breaking:அதிர்ச்சி...வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை மேலும் ரூ.101 உயர்வு!

In Chennai, the price of a 19 kg cooking gas cylinder for commercial use has been increased by Rs 101 to Rs 2,234.

சென்னை:வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.101.50 அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமையல் கேஸ் சிலிண்டர் விலை மாதம் தோறும் முதல் தேதியில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.அதன்படி,கடந்த நவம்பர் 1 ஆம் தேதி கேஸ் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு,சென்னையில் வணிக ரீதியான பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை 268 ரூபாய் உயர்ந்து ரூ.2133-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில்,டிசம்பர் 1 ஆம் தேதியான இன்று சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று ரூ.101.50 அதிகரித்து ரூ.2,234 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதன்மூலம்,19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒரே ஆண்டில் ரூ.770 உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு,வணிக பயன்பாடு சிலிண்டர் விலை மேலும் உயர்த்தப்பட்டுள்ளது, ஓட்டல்கள் மட்டும் அல்லது டீக்கடைகள், பேக்கரி உரிமையாளர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.