சென்னை நகைக்கடையில் 9 கிலோ தங்க நகைகள் திருட்டு.! நள்ளிரவில் கொள்ளையடித்த 'வெல்டிங்' திருடர்கள்.! 

சென்னை பெரம்பூரில் நகைக்கடையில் ஷட்டரை வெல்டிங் வைத்து அறுத்து உள்ளே புகுந்து 9 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.

சென்னை பெரம்பூரில் நகைக்கடையில் ஷட்டரை வெல்டிங் வைத்து அறுத்து உள்ளே புகுந்து 9 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.

சென்னை பெரம்பூரில் இயங்கி வரும் ஓர் தனியார் நகைக்கடையில் நேற்று நள்ளிரவு நகை கொள்ளையடிக்கபட்டுள்ளது. நேற்று வழக்கம் போல கடையின் உரிமையாளர் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். அதனை அடுத்து நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள் முதலில் வெல்டிங் மிஷின் கொண்டு கடையின் கதவை துளையிட்டுள்ளனர்.

20 லட்ச ரூபாய் வைர கற்கள் :அடுத்ததாக, உள்ளே சென்ற அந்த கும்பல், நகை வைக்கப்பட்டு இருக்கும் அந்த பெட்டகத்தையும் வெல்டிங் வைத்து அறுத்து உள்ளே இருந்த 9 கிலோ தங்க நகைகளையும், 20 லட்சம் மதிப்புள்ள வைர கற்களையும் திருடி சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உஷார் நிலையில் போலீசார் :இந்த சம்பவத்தை அடுத்து, பெரம்பூர், வியாசர்பாடி பகுதி போலீசார் உஷார்படுத்தப்பட்டு, தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சிசிடிவி காட்சிகளும் ஆராயப்பட்டு வருகிறது. அடுத்து கைரேகை நிபுணர்கள் வந்து மேலும் சோதனைகளை மேற்கொள்ள உள்ளனர் .