காய்ச்சல் பரவுவதை முன்னிட்டு காவல் துறை சார்பில் மருத்துவ முகாம்...!!!

சென்னை மாநகராட்சி பகுதிகளில் பன்றி காய்ச்சல், வைரஸ், டெங்கு காய்ச்சல் பரவி வருவதால், பல இடங்களில் இலவச மருத்துவ முகாம்கள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள்

சென்னை மாநகராட்சி பகுதிகளில் பன்றி காய்ச்சல், வைரஸ், டெங்கு காய்ச்சல் பரவி வருவதால், பல இடங்களில் இலவச மருத்துவ முகாம்கள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கீழ்பாக்கம் காவல் சரகம் சார்பில் நேற்று, நேரு பூங்கா வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், இலவச மருத்துவ முகாம் நடந்தது. ஏராளமானோர் பங்கேற்று சிகிச்சை பெற்றனர்.