தனது மகளுடன் காத்திருந்து வாக்களித்த கமலஹாசன்

மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அனைத்து அரசியல் தலைவர்களும்,

மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அனைத்து அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் தனது மகளுடன் வாக்களிப்பதற்காக சென்னை ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடிக்கு இருவரும் வந்திருந்தனர். ஆனால், வாக்குப்பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால், வரிசையில் காத்திருந்து, இயந்திரம் பழுது நீக்கப்பட்ட பின் தங்களது வாக்குகளை இருவரும் பதிவு செய்துள்ளனர்.