முதலில் சீனாவில் தனது ஆட்டத்தை தொடங்கிய கொரோனா வைரஸ், அங்கு பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய நிலையில், தொடர்ந்து மற்ற நாடுகளிலும் இது பரவ தொடங்கியது. இந்தியாவிலும், இந்த நோய் பரவி வருகிற நிலையில், தற்போது இந்த வைரஸ் தமிழகத்திலும் பரவி வருகிறது.
இதனையடுத்து, இந்திய அரசு இதனை தடுப்பதற்கு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் விதமாக அமைச்சர் ஜெயக்குமார் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.