அம்பேத்கரின் 132வது பிறந்தநாள்.! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் மரியாதை.!

அம்பேத்கரின் 132வது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார்.

அம்பேத்கரின் 132வது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார்.

இன்று ஏப்ரல் 14-ல் சித்திரை 1 தமிழ்ப்புத்தாண்டு தினம் கொண்டாடப்படுவது போல, சட்டமாமேதை அண்ணல் அம்பேத்கரின் 132வது பிறந்தநாள், அம்பேத்கர் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு பல அரசியல் கட்சி தலைவர்கள் அவரது சிலைக்கு மலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம் .

தமிழக அரசு சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.