சென்னையில் 25 வழித்தடங்களில் 50 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் – மாநகர போக்குவரத்து கழகம்

தீபாவளியை முன்னிட்டு சென்னையில்  50 கூடுதல் சிறப்பு பேருந்துகள்  இயக்கப்படுகிறது.

தீபாவளியை முன்னிட்டு சென்னையில்  50 கூடுதல் சிறப்பு பேருந்துகள்  இயக்கப்படுகிறது.

நவம்பர் 14 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.ஆகவே   பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகளை இயக்க சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,தீபாவளியை முன்னிட்டு, வணிக வளாகங்களுக்கு சென்று வர ஏதுவாக வார இறுதி நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.அக்டோபர் 24 முதல் 26 -ஆம் தேதி வரையும்,அக்டோபர் 31 முதல்  நவம்பர் 1 -ஆம் தேதி வரையும், நவம்பர் 7 முதல் 8 வரை ஆகிய 7 நாட்களுக்கு 25 வழித்தடங்களில் 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.