#Live:சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட ரெட் அலெர்ட் நீக்கம்

Red alert issued for Chennai and Tiruvallur districts

சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த ரெட் அலெர்ட்  விலக்கிக்கொள்ளப்பட்டு ஆரஞ்சு அலெர்ட்டாக மாறுகிறது என்றும் உள் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது சென்னையிலிருந்து  தென்-தென்கிழக்கே சுமார் 150 கி.மீ தொலைவிலிருந்து 18 கி.மீ. வேகத்தில் தொடர்ந்து மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து வருவதாகவும்.

இது வடக்கு தமிழகம் & அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடற்கரைகளை புதுச்சேரிக்கும் சென்னைக்கும் இடையே நவம்பர் 19 ஆம் தேதி அதிகாலையில் கரையை கடக்கும்  என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.