மீண்டும் திறக்கப்படும் செம்பரம்பாக்கம் ஏரி.!

It has been announced that 1000 cubic feet of water will be discharged at 12 noon today in Sembarambakkam Lake.

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்தை அடுத்து இன்று மதியம் 12 மணியளவில் 1000 கன அடி நீர் வெளியேற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியானது மொத்தமாக 23.5 அடி கொண்ட நிலையில் தற்போதைய ஏரியின் நீர்மட்டம் 22.15ஆக உயர்ந்துள்ளது.மேலும் ஏரிக்கு வரும் நீர்வரத்து 3000 கன அடியாக உயர்ந்துள்ளது.எனவே ஏரியிலிருந்து நீர் வெளியேற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நிவர் புயல் காரணமாக பெய்து கனமழையால் நிறைந்த செம்பரப்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டது .இந்த நிலையில் தற்போது ஏரியின் நீர்மட்டம் 22.15 அடியை எட்டியதை ஒட்டி இன்று மதியம் 12 மணியளவில் ஏரியிலிருந்து முதல்கட்டமாக 1000கன அடி நீர் வெளியேற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே காவலூர், குன்றத்தூர்,திருமுடிவாக்கம் , திருநீர்மலை,நத்தம்,வழிநிலைமேடு உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வலியுறுத்தி உள்ளனர்.