தமிழகத்தில் சற்றே அதிகரிக்கும் கொரோனா கவனம் தேவை மக்களே !

தமிழகத்தில்  கடந்த 24 மணி நேரத்தில் 2743 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில்  கடந்த 24 மணி நேரத்தில் 2743 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 2743 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்று மட்டும் 2662 பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சற்று எண்ணிக்கை உயர்ந்துள்ளது .

கொரோனாவால் தமிழகத்தில் வீடு மற்றும் மருத்துவமனைகளில் 17,717 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று மட்டும் 1791 பேர் குணமடைந்துள்ளனர்,உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் இன்று  1062 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 13,086 ஆக பதிவாகிய நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 16,159 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.