திருமணத்தின் போது மணமகன் செய்த செயல்.மாமியார் வீட்டிற்கு சென்ற மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி.
கண்ணிவைத்து பிடித்த காவல்துறையினர்.
சென்னை திருவேற்காடு பகுதியில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் பச்சையப்ப கல்லூரி முன்னால் ரூட் தல புவனேஷ் என்பவரின் திருமணம் நடைபெற்றுள்ளது.இதில் கலந்து கொண்ட பச்சையப்ப கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியை கொண்டு வந்துள்ளனர்.
அந்த 3 அடி நீல பட்டாக்கத்தியை மணமகனின் கையில் கொடுத்து கேக் வெட்ட வைத்துள்ளனர்.அப்போது மணமகன் கத்தியை சுழற்றி கேக் வெட்டியுள்ளார்.பின்னர் மாணவர்களும் கையில் கத்தியை சுழற்றி மகிழ்ந்துள்ளனர்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில் கோயம்பேட்டில் உள்ள மாமியார் வீட்டிற்கு புவனேஷ் விருந்துக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த திருவேற்காடு காவல்துறையினர் புவனேசை கைது செய்துள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
unknown nodeமேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.