சென்னையில் யுடியூப் பார்த்து மதுபானம் செய்த இருவர் கைது!

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் குடிமகன்கள் மிகவும் திண்டாட்டத்தில் உள்ளனர்.

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் குடிமகன்கள் மிகவும் திண்டாட்டத்தில் உள்ளனர்.இந்நிலையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையை அடுத்த, சின்ன நீலாங்கரை பகுதியை சேர்ந்தவர், ராகுல் (22). இவர் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது நண்பர் வினோத்ராஜ் மார்க்கெட்டிங் வேலை செய்து வருகிறார்.இவர்கள் இருவருக்கும், குடிப்பழக்கம் இருந்துள்ளது. தற்போது மது கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், இவர்கள் இருவரும் யுடியூபை பார்த்து, திராட்சை, நாட்டு சர்க்கரை மற்றும் பட்டை இலை ஆகியவற்றை பயன்படுத்தி மதுபானம் தயாரிக்க முயன்றுள்ளனர்.இதுகுறித்து தகவலறிந்த நீலாங்கரை போலீசார் இருவரையும் கைது செய்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.