ஒரே நாளில் கோவையில் 978 ஊரடங்கு வழக்குகள்..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருக்கிறது கோயம்பத்தூர். இங்கு ஒரே நாளில் 978 ஊடங்கு வழக்குகள் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருக்கிறது கோயம்பத்தூர். இங்கு ஒரே நாளில் 978 ஊடங்கு வழக்குகள் பதிவாகியுள்ளது.

கொரோனா பாதிப்பால் தமிழக முதல்வர் ஊரடங்கை பிறப்பித்துள்ளார். அதன்படி, ஊரடங்கில் தேவையின்றி வெளியில் செல்பவர்கள் மீது கோவை காவல் துறையினர் நேற்று ஒரே நாளில்978வழக்குகளை பதிவு செய்துள்ளனர். கோவையில் தொற்று எண்ணிக்கை ஒரு புறம் அதிகரித்துக்கொண்டிருக்க, மறுபுறம் ஊரடங்கின் நோக்கம் புரியாமல் மக்கள் வெளியே சுற்றி திரிகின்றனர்.

இதனால் நேற்று முகக்கவசம் அணியாமல் வெளியே வந்த180பேர் மீதும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத42பேர் மீதும் வழக்கு பதிவாகியுள்ளது. மேலும், ஊரடங்கில் விதியை மீறி தேவையின்றி வாகனத்தில் சென்ற600பேர் மீதும், அத்யாவசிய தேவை இல்லாமல் வெளியில் வாகனத்தில் சுற்றி திரிந்த156பேர் மீதும் வழக்கு பதிந்துள்ளனர். இதனால் கோவையில் நேற்று ஒரு நாளில்978ஊரடங்கு வழக்குகள் பதிவாகியுள்ளது.

இவ்வழக்குகளின் சார்பில்203வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனால் கோவை காவல் துறையினர், கொரோனாவிலிருந்து காப்பாற்றி கொள்ள வீட்டை விட்டு வெளியே வராதீர்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளது.