முக்கிய அறிவிப்பு! சிறுமி வன்கொடுமை செய்து கொலை-துப்புக்கொடுத்தால் உரிய சன்மானம் வழங்கப்படும்

Breaking News! The child will be rewarded with murder and spouse

கோவையில் சிறுமி வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பொதுமக்கள் துப்புக்கொடுத்தால் உரிய சன்மானமும், துப்புக்கொடுத்தவர்கள் யார் என்பது ரகசியம் காக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சதீஷ் என்பவர் கோவை மாவட்டம் பன்னிமடை கஸ்தூரி நாயக்கன் புதூரை சேர்ந்தவர் ஆவார் . இவரது மனைவி பெயர் வனிதா.சதிஷ்-வனிதா தம்பதியினருக்கு  இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர்களது மூத்த மகள் திப்பனூரில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 25 ஆம் தேதி  வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை காணவில்லை என்று சிறுமியின் பெற்றோர் கொடுத்தனர்.

இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் கீழ் போலீசார் விசாரணையை தொடங்கினர்.போலீசார் நடத்திய விசாரணையில் புதூர் என்ற இடத்தில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த சிறுமியின் உடல் கைப்பற்றப்பட்டது. உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சிறுமியின் பிரேத பரிசோதனை நேற்று வெளியானது.வெளியான அறிக்கையில்,  கொலைக்கு முன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதும், கழுத்தை நெறித்து கொல்லப்பட்டதும் பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டது.

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.இதனால் போலீசார் வழக்கு விசாரணையை தொடர்ந்தனர்.இந்த வழக்கு தொடர்பாக 4 பேரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

unknown node

இதனையடுத்து கோவை துடியலூர் ஜங்சனில் சிறுமியின் கொலைக்கு நீதி கேட்டு ஏராளமானோர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அதேபோல் தமிழகம் முழுவதும் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் சிறுமி வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் துப்பு கொடுத்தால் சன்மானம் குற்றவாளிகள் குறித்து தகவல் அளிப்பவரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்

இந்நிலையில் போலீசால்  இன்று வரை குற்றவாளிகளை  கண்டுபிடிக்க முடியவில்லை .இதனால் போலீஸ் தரப்பில் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டு வருகிறது.அதில் கோவையில் சிறுமி வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பொதுமக்கள் துப்புக்கொடுத்தால் உரிய சன்மானமும், துப்புக்கொடுத்தவர்கள் யார் என்பது ரகசியம் காக்கப்படும் என்றும் இந்த வழக்கில் குற்றவாளிகளை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில் சந்தேகத்தின் மீது கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் தொடர்ந்து புலனாய்வு விசாரணை நடைபெற்று வருகிறது.

எனவே இந்த வழக்கு தொடர்பாக பொதுமக்கள் 9498174227 ,9443122744, 9498174226 என்ற  தொலைபேசி எண்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.