கோவை மாணவி தற்கொலை : ஆசிரியர் மிதுனை 2 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி!

Coimbatore: A Coimbatore court has granted permission to detain teacher Mithun for two days in connection with the suicide of a Coimbatore student.

கோவை மாணவி தற்கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர் மிதுனை 2 நாள் காவலில் வைத்து விசாரிக்க கோவை போக்சோ  நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கோவையை சேர்ந்த 17 வயது மாணவி பாலியல் தொல்லை காரணமாக கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து உயிரிழந்த நிலையில் மாணவியின் கடிதத்தின் அடிப்படையில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர் மிதுனை 15 நாள் காவலில் வைத்து விசாரிக்க போலீசார் அனுமதி கோரிய நிலையில், ஆசிரியர் மிதுனை இரண்டு நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.