முதலில் சீனாவில் தனது ஆட்டத்தை தொடங்கிய கொரோனா வைரஸ், அங்கு பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய நிலையில், தொடர்ந்து மற்ற நாடுகளிலும் இது பரவ தொடங்கியது. இந்தியாவிலும், இந்த நோய் பரவி வருகிற நிலையில், தற்போது இந்த வைரஸ் தமிழகத்திலும் பரவி வருகிறது.
இந்நிலையில்,தமிழகத்தில் பல மாநிலங்களில் இந்த தொற்றினால், பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்நோயால் சென்னையில் 91 பேர் பாதிக்கப்பட்டு, தமிழகத்தில் முதல் இடத்தில் உள்ளது. இதனையடுத்து, கோவை மாவட்டத்தில் 58 பேர் பாதிக்கப்பட்டு, தமிழகத்தில் இரண்டாவது இடத்தி உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 571 பேருக்கு கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.