நவம்பர் 15ல் இந்த 4 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம்

The Met Office has forecast showers in a few places in Chennai for the next 48 hours.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் வரும் 15-ஆம் தேதி தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதர மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.

நவம்பர் 16 மற்றும் 17-ல் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழை தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இதனிடைய, வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால் 17ஆம் தேதி வரை மீனவர்கள் வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு – வடமேற்கில் நகர்ந்து காற்றழுத்த மண்டலமாக வலுவடையக்கூடும் என்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வாங்க கடலில் மத்திய கிழக்கு – தென் கிழக்கு பகுதியில் வரும் 15ம் தேதி வரை நீடிக்கும் என்றும் கூறியுள்ளது.