ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள நல்லிக்கவுண்டன் கிராமத்தை சேர்ந்தவர், விஸ்வநாதன். இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். இவருக்கு கடவுள் நம்பிக்கை அதிமாக உள்ள காரணத்தினால், கடந்த 15ஆம் தேதி துறவறம் மேற்கொண்டார்.இவர், அமர்நாத் யாத்திரை சென்று வந்தார். அதன் பின், விஸ்வநாதன் என்ற பெயரை நிஜானந்த காசி விஸ்வநாத சுவாமிகள் என மாற்றி கொண்டார்.
unknown nodeஇவர், தனது சொந்த இடத்தில 10 அடிக்கு ஒரு பள்ளம் தோண்டினார். அதில் அவர் 48 நாள் உணவு அருந்தாமல் மௌன விரதம் இருக்க போவதாக கூறினார். அதன் படி, அவர் கடந்த 17ஆம் தேதி அந்த குழிக்குள் இறங்கி, ஒரு பாதாள லிங்கத்தை வைத்து தனது விரதத்தை தொடங்கினார்.
இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர், குழிக்குள் இருந்த அவரை காண அந்த பகுதிக்கு திரண்டனர். விரதம் மேற்கொண்டு வரும் அவரை சந்தித்து, அந்த மக்கள் ஆசிர்வாதம் பெற்று சென்றனர்.