அத்திவரதர் தரிசன நீட்டிக்கக்கோரிய மனு தள்ளுபடி !

காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் வசந்த மண்டபத்தில் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை சயனகோலத்தில்  காட்சியளித்தார். பிறகு

காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் வசந்த மண்டபத்தில் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை சயனகோலத்தில்  காட்சியளித்தார். பிறகு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இன்று வரை நின்ற கோலத்தில் காட்சியளித்து வருகிறார்.

இன்றுடன் அத்திவரதர் வைபவம்  நிறைவடைய உள்ளது.இந்நிலையில்  தரிசன நாள்களை நீடிக்க கோரிய இரண்டு மனுக்களையும் சென்னை உயர்நீதிமன்றம்  தள்ளுபடி செய்தது. மத வழிபாடு நடைமுறைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என நீதிபதி மணிகுமார் , சுப்பிரமணியன் பிரசாத் கூறினார்.