கன்னியாகுமரி உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் மேலும் ஒரு தீவிரவாதி கைது!

Authorities have now arrested another man in connection with the murder of Wilson, who worked as an assistant inspector.

கன்னியாகுமரி மாவட்டத்தின் உதவி ஆய்வாளராக பணியாற்றிய வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில், தற்போது மேலும் ஒரு தீவிரவாதி என என்பவர் அதிகாரிகள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த வில்சன் அவர்கள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதி களியக்காவிளை சோதனை சாவடி அருகே சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை உண்டாக்கிய நிலையில், இந்த வழக்கில் காஜா, மொய்தீன், உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

மேலும் இந்த வழக்கை தற்போது விசாரித்து வருகின்றனர், ஒரு ஆண்டுக்கு மேலாக இந்த வழக்கு தொடர்ந்து வரும் நிலையில் தற்பொழுது சென்னை விமான நிலையத்தில் வைத்து இந்த வழக்கில் தொடர்புடைய தீவிரவாதி ஷகாபுதீன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் என தகவல் வெளியாகி உள்ள நிலையில், இவர் கைது செய்யப்பட்ட மற்ற தீவிரவாதிகளுக்கு உதவிய தீவிரவாதி எனவும் தகவல் வெளியாகியுள்ளது.