கன்னியாகுமரி;ஒக்கி புயலால் காணமல் போன தமிழக மீனவர்கள் கேரள கடல் பகுதிகளில் மீட்கப்பட்ட 70 உடல்கள் கொச்சி மற்றும் கொல்லம், திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைகளில் வைக்கப்பட்டிருந்தன. திருவனந்தபுரத்தில் இருந்த உடல்கள் மரபணு சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், கன்னியாகுமரியை சேர்ந்த 5 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. இதையடுத்து, கிளிட்டசின் என்ற மீனவரின் உடல் சொந்த ஊரான சின்னத்துறைக்கு கொண்டு வரப்பட்டது. இதேபோல், மேலமணக்குடியை சேர்ந்த மைக்கேல் என்பவரின் உடலும் கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்…
sources;www.dinasuvadu.com