ஸ்டெர்லைட் ஆலை தீங்கு தொடர்பான வழக்கு ; தூத்துக்குடி எஸ்.பி.யிடம் விளக்கம் கேட்க நீதிமன்றம் உத்தரவு...!!

Sterlite ,HighCourt ,Madurai,Sterlite Industries, a subsidiary of UK-based Vedanta Group,

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை தீங்கு தொடர்பான விழிப்புணர்வு பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி தொடர்ந்த வழக்கில் தூத்துக்குடி எஸ்.பி.யிடம் விளக்கம் கேட்டு தெரிவிக்க அரசு சம்மந்தப்பட்ட வழக்கறிஞருக்கு மதுரை உயர்நீதிமன்றகிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் இயக்கம்  சார்பில் பள்ளி மாணவர்கள்,பெண்கள்,அ.குமாரரெட்டியார் புறம் கிராம பொதுமக்கள் இரு நாட்கள் தூத்துக்குடியில் போராட்டம் நடத்தி ,பின்னர் கைது  செய்யப்பட்டனர்  என்பது குறிப்பிடத்தக்கது.