#Breaking:அண்ணா பல்கலைக்கழகத்தின் மறுதேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு..!

Anna University Re-Examination Schedule Released

அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் மாணவர்களுக்கான ஏப்ரல் – மே மாதம் மற்றும் மறுதேர்வு உள்ளிட்ட செமஸ்டர் தேர்வுக்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த பிப்ரவரி,மார்ச் மாதங்களில் ஆன்லைனில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வில் பெரும்பாலான மாணவர்கள் தோல்வியடைந்தனர்.

மேலும்,ஆன்லைன் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டதால் தோல்வி என விளக்கமளித்த அண்ணா பல்கலைக்கழகம்,மறு தேர்வு நடத்தப்படும் என அறிவித்திருந்தது.

இந்நிலையில்,பொறியியல் மாணவர்களுக்கான ஏப்ரல் – மே மாதம் மற்றும்  மறுதேர்வுக்கான செமஸ்டர் தேர்வுகளின் அட்டவணையானது தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின்https://www.annauniv.edu/அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி,தேர்வானது வரும் 21 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாகவும், இந்த தேர்வானது காலை,மாலை என இருவேளை 3 மணி நேரம் ஆப்லைன் முறையில் நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது.

அதன்படி,காலை 9.30 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும்,மேலும், மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் தேர்வு நடைபெறும் என்றும்,மேலும்,மாணவர்கள் தேர்வு எழுதியதும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து,அரியர் மாணவர்களுக்கான தேர்வானது வருகின்ற ஜூன் 17 ஆம் தேதி தொடங்கவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.