பழைய முறைப்படியே தேர்வுகள் நடத்தப்படும் -அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு...!

Examinations will be conducted according to the old system - Anna University announcement

பழைய முறைபடியே பொறியியல் தேர்வுகள் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

பொறியியல் மாணவர்களுக்கு கொரோனா தொற்றுக்கு முந்தைய காலங்களில் நடத்தப்பட்டது போலவே நேரடி எழுத்துத் தேர்வு நடத்தப்படும். அதன்படி,நடப்பு செமஸ்டருக்கான வினாத்தாள் வடிவமைப்பு பழைய எழுத்துத் தேர்வு அடிப்படையிலேயே இருக்கும் என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து,தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியலை வருகின்ற ஜூன் 7 ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கல்லுரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும்,மேலும்,ஜூன் 12ஆம் தேதிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.