பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இந்திய மாணவர்கள் ஃபிரான்சுக்கு வர அழைப்பு!

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்  இந்தியாவில் இருந்து அதிக அளவில் மாணவர்கள் கல்வி பயில ஃபிரான்சுக்கு வரவேண்டும் என்று  அழைப்பு விடுத்துள்ளார்.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்  இந்தியாவில் இருந்து அதிக அளவில் மாணவர்கள் கல்வி பயில ஃபிரான்சுக்கு வரவேண்டும் என்று  அழைப்பு விடுத்துள்ளார்.

டெல்லியில் உள்ள பைகானீர் (Bikaner) இல்லத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர், இந்தியா வரும் பிரான்ஸ் மாணவர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க விரும்புவதாகத் தெரிவித்தார். உலகம் டிஜிட்டல் புரட்சிக்கும் பருவநிலை மாறுபாட்டுக்கும் மத்தியில் இருப்பதாகக் கூறிய மேக்ரான், மாறுபட்ட சிந்தனைகளும் செயல் வேகமும் அவசியம் என்றார். தொழில்முனைவோருக்கான வாய்ப்புகள் எளிமைப்படுத்தப்படவேண்டும் என்றும் சவால்களைச் சந்திக்கத் தயாராக இருப்போரின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பருவநிலை மாறுபாடு, தீவிரவாதம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு பேராசை மிக்க தலைவர்களின் குறுகிய கண்ணோட்டமே காரணம் என்றும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் குற்றம்சாட்டினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.