தேசிய திறனாய்வு தேர்வு : ஆகஸ்ட்  22-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறும்  தேசிய திறனாய்வு தேர்விற்கு செப்டம்பர் 7-ஆம் தேதி வரை  விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறும்  தேசிய திறனாய்வு தேர்விற்கு செப்டம்பர் 7-ஆம் தேதி வரை  விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக  தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,தேசிய திறனாய்வு தேர்வு எழுத விரும்பும் 10ம் வகுப்பு மாணவர்கள் ஆகஸ்ட்  22-ஆம் தேதி முதல் செப்டம்பர்  7-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும்மாணவர்கள்http://dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நவம்பர் 3-ஆம் தேதி தேசிய திறனாய்வு தேர்வு நடைபெறும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.