செங்கல்பட்டு,காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை (13.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வந்ததையடுத்து,பல்வேறு மாவட்டங்களில் சாலைகள்,வீடுகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.இதனையடுத்து,மழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளிகள்,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,மழை மற்றும் பல்வேறு பகுதியில் தண்ணீர் தேங்கியிருப்பதன் காரணமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளை (13.11.2021) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல,திருவள்ளூர் மாவட்டத்திலும் நாளை(13.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து […]
தமிழகத்தில் தொடர் மழை காரணமாக 14 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுவதாலும், தொடர்ச்சியாக மழை பெய்து வருவதாலும் இன்று 14 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் தமிழகத்தில் கடலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் […]
திருவள்ளூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் நாளை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி,காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருப்பெற்றதனால்,சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.இதற்கிடையில், சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று அதிக கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில்,ஏற்கனவே பெய்த மழையால்,வெள்ள நீர் தேங்கியுள்ளதன் காரணமாகவும்,மழை தொடர்வதாலும் சென்னை,காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளையும் (நவ.12) பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை என அந்தந்த மாவட்ட […]
தொடர்மழை காரணமாக தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முழுவதுமாக ஒத்திவைக்கப்படுவதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு 8.11.2021 முதல் 12.11.2021 வரை நடைபெறவிருந்த நிலையில்,தற்சமயம் தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 8.11.2021 மற்றும் 9.11.2021 அன்று நடைபெறவுள்ள தமிழ் மற்றும் ஆங்கில தேர்வுகள் மட்டும் ஒத்திவைக்கப்படுவதாக நேற்று முன்தினம் தமிழக அரசு தேர்வுகள் இயக்குநர் சேதுராமவர்மா அறிவித்திருந்தார். இந்நிலையில்,தொடர் மழை காரணமாக நவம்பர் 10,11,12 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள கணிதம், அறிவியல், மற்றும் […]
புதுச்சேரியில் நாளை 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடங்கவிருந்த நிலையில், அவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் புதுச்சேரியில் 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று தற்பொழுது குறைந்துள்ளது. இதனை அடுத்து நவம்பர் 8 ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும் […]
நீட் தேர்வு அச்சத்தால் மேலும் ஒரு மாணவர் மரணம் அடைந்துள்ளதால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாணவர்கள் தற்கொலை செய்து உயிரிழந்து வரும் நிலையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் எனும் மாணவர் நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ எனும் அச்சம் காரணமாக நவம்பர் 1 ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். […]
NEET இன் முடிவை தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்டுள்ளது. மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக தேசிய அளவில் ‘நீட்’ என்ற பெயரில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மருத்துவ நுழைவுத் தேர்வை ‘நீட்’ ஆகஸ்ட் 01 ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது, பின்னர் நீட் தேர்வு செப்டம்பர் 12, 2021 அன்று நடத்தப்பட்டது. இந்த ஆண்டு சுமார் 16 லட்சம் பேர் தேர்வெழுதினர். இந்நிலையில், NEET UG 2021 […]
GATE நுழைவுத்தேர்வுக்காக பதிவேற்றம் செய்யப்பட்ட ஆன்லைன் விண்ணப்பத்தில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், அதனை திருத்திக்கொள்ள இன்று ( நவம்பர் 1) முதல் நவம்பர் 12ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஐஐடி பல்கலைக்கழக கல்லூரியில் சேர்வதற்கான நுழைவு தேர்வான GATE (Graduate Aptitude Test in Engineering) அடுத்த வருட பிப்ரவரி மாதம் நடக்க உள்ளது. M.E , M.Tech போன்ற மேற்படிப்புகளை ஐஐடியில் சேர்ந்து படிப்பதற்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது. மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், […]
தூத்துக்குடி, திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழை காரணமாக தஞ்சாவூர், திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தின் சென்னை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, […]
மரக்காணம் அருகே கடப்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மரக்காணம் செல்லும் வழியில் செங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், பள்ளி மாணவர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறைகளை கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து, மாணவர்களுக்கான மதிய உணவையும் நேரில் பார்வையிட்டார். செங்கல்பட்டு மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை இன்று மாலை முதல்வர் தொடங்கி வைக்கிறார். இல்லம் தேடி கல்வி திட்டத்திற்காக செங்கல்பட்டு சென்ற முதல்வர் […]
புதுச்சேரியில் நவம்பர் 8-ஆம் தேதி முதல் 1-8-ஆம் வகுப்புகளுக்கு பள்ளி திறப்பு. புதுச்சேரியில் நவம்பர் 8-ஆம் தேதி முதல் 1-8-ஆம் வகுப்புகளுக்கு பள்ளி திறக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். 1-8-ஆம் வகுப்புக்கு பள்ளியில் மத்திய உணவு வழங்கப்படாது; நகரில் 9-முதல் 1 மணி வரையும், கிராமங்களில் 9:30 முதல் 1 மணி வரை பள்ளிகள் செயல்படும் என தெரிவித்தார். மேலும், வருகை பதிவேடு கிடையாது, சுயவிருப்பத்தின் பேரில் மாணவர்களை பெற்றோர் பள்ளிகளுக்கு அனுப்பலாம். அதேபோல 1-8-ஆம் […]
உள்ளாட்சி தேர்தலையொட்டி பொறியியல் கல்லூரிகளுக்கு நாளை மற்றும் 9-ஆம் தேதி விடுமுறை தமிழகத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற நாளை மற்றும் வரும் 9-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. நாளை கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலையொட்டி பொறியியல் கல்லூரிகளுக்கு நாளை மற்றும் 9-ஆம் தேதி […]
தமிழகத்தில் “வீடு தேடி பள்ளிகள்” என்ற புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தவுள்ளது. தமிழகத்தில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். இந்த நிலையில்,தமிழகத்தில் உள்ள மழலையர் மற்றும் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளியை போக்க வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் புதிய திட்டத்தை பள்ளிக் […]
பள்ளிக் குழந்தைகள் மதிய உணவு திட்டத்துக்கு(ஊட்டச்சத்து) மத்திய அரசு ரூ .1.31 கோடி ஒப்புதல் அளித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 11.2 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் PM-POSHAN திட்டத்தை தொடங்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குத் தொடரும் மற்றும் இத்திட்டத்திற்காக சுமார் ரூ.1.31 லட்சம் கோடி செலவிடப்படும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.பிஎம் […]
பீகார் மாணவர் சத்யம் காந்தி, தனது முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வை முறியடித்து இந்திய அளவில் 10 வது ரேங்க் பெற்று சாதனை புரிந்துள்ளார். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் 2020-ம் ஆண்டுக்கான இந்திய குடிமைப் பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் இறுதித் தேர்வு முடிவுகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியாகின.இதில் 761 பேர் உடனடி நியமனத்துக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில்,பீகாரில் ஒரு கிராமப்புற குடும்பத்தில் இருந்து டெல்லி வந்த சத்யம் […]
2001-2002 முதல் 20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு ஒரு சிறப்பு வாய்ப்பை அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. 20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் அண்ணா பல்கலைக்கழகம் ஓர் முக்கிய அறிவிப்பை அறிவித்துள்ளது.அதாவது,2001-2002 கல்வியாண்டு (3 வது செமஸ்டர்) முதல் 20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்கள் வருகின்ற நவம்பர் – டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வில் பங்கேற்று தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி,இன்று முதல் https://coe1.annauniv.edu/home/ […]
கேரளாவில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் பள்ளிகள் திறக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கொரோனா தீவிரமாக பரவியதைத் தொடர்ந்து கேரளாவில் ஒன்றரை வருடங்கள் மூடப்பட்ட பள்ளிகளானது,தற்போது நவம்பர் 1 ஆம் தேதியிலிருந்து 1 முதல் 7, 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மீண்டும் திறக்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று தெரிவித்தார். கேரளாவில் பள்ளிகள் திறப்பது குறித்து மாநில உயர் அதிகாரிகளுடன் அம்மாநில முதல்வர் பினராயி ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து,செய்தியாளர்களிடம் […]
வேளாண் அலுவலர் உள்ளிட்ட பதவிக்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), தற்போது உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் ,தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி மற்றும் வேளாண் அலுவலர் (விரிவாக்கம்) ஆகிய 991 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு கடந்த 17.04.2021 மற்றும் 18.04.2021 ஆகிய தேதிகளில் தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில்,இப்பதவிகளுக்கான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.அதன்படி,இத்தேர்வு எழுதியவர்கள் அதன் முடிவுகளை https://www.tnpsc.gov.in/english/Results.aspx என்ற டிஎன்பிஎஸ்சி […]
CAT 2021 தேர்விற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால் கீழ் காணும் முறைகளை பின்பற்றி விண்ணப்பியுங்கள். CAT 2021 பொது நுழைவுத் தேர்வுக்கான ஆன்லைன் பதிவு செயல்முறை இன்றுடன்(செப்டம்பர் 15) முடிவடைகிறது. CAT 2021 க்கான விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்யாத அனைத்து விண்ணப்பதாரர்களும் iimcat.ac.in. இந்த அதிகாரப்பூர்வ வலைதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். அகமதாபாத்தின் இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐஐஎம்) நவம்பர் 28 ஆம் தேதி கேட் 2021 தேர்வை நடத்தும். இந்த தேர்வு 158 நகரங்களில் […]
12ஆம் வகுப்பை தொடர்ந்து, 10, 11ஆம் வகுப்பு மாற்றுத் திறனாளி தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்டம்பர் 2021-ல் நடைபெறவுள்ள 10 மற்றும் 11-ஆம் வகுப்பு துணைத்தேர்வுகளை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தற்போது நிலவிவரும் கோவிட்-19 நோய் தொற்று பரவல் காரணமாக தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.