JEE மெயின் 2021 முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட JEE மேம்பட்ட 2021 க்கான பதிவு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. JEE மேம்பட்ட 2021- க்கான பதிவு, இன்று தொடங்க திட்டமிடப்பட்ட நிலையில், JEE மெயின் 2021 முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட JEE மேம்பட்ட 2021 க்கான பதிவு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், JEE (மெயின்) 2021 முடிவுகளில் வெளியிடுவதில் தாமதம் […]
நாடு முழுவதும் இன்று முதுகலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு, கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்பொழுது கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்துள்ள நிலையில், முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு செப்டம்பர் 11-ஆம் தேதி கொரோனா தடுப்பு […]
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மாணவர்கள் சேர்க்கை இன்று முதல் நடைபெறுகிறது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 11 இளங்கலை பட்டப்படிப்புகள் 14 உறுப்பு கல்லூரிகள் மற்றும் 28 இணைப்பு கல்லூரிகள் மூலமாக வழங்கப்படுகின்றன. நடப்பு கல்வி ஆண்டிற்கான (2021-222) இளங்கலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மாணவ, மாணவிகளிடமிருந்து செப்டம்பர் 8, 2021 முதல் (புதன்கிழமை) இணையதளம் மூலமாக பெறப்படவுள்ளது. தமிழக அரசு அறிவிப்பின்படி, இந்த கல்வி ஆண்டு முதல் புதிதாக வேளாண்மை மற்றும் […]
10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு தனித்தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியீடு 10 மற்றும் 11 வகுப்புகளுக்கான துணைத்தேர்வுகள், தனித்தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியிட்டப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்கள் தங்கள் ஹால் டிக்கெட்டை dge.tn.gov.in என்ற இணையதளத்தில் நாளை காலை 11 மணி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். செப்டம்பர் 13,14-ம் தேதிகளில் தனித்தேர்வர்களுக்கும், துணைத்தேர்வு எழுத பதிவு செய்துள்ள அனைவருக்கும் செய்முறைத் தேர்வு நடைபெறுகிறது.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பால் கலைப்பாடப் பிரிவுகளில் 25% கூடுதல் இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பால் 2021-2022-ஆம் கல்வியாண்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 25% மாணவர்கள் கூடுதலாக சேர்க்க உயர்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. அறிவியல் பாடப் பிரிவுகளில் ஆய்வக வசதிக்கேற்ப கூடுதலாக 25 சதவீதம் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு பல்கலைக்கழகங்களிடம் கல்லூரிகள் அனுமதி பெற வேண்டும் […]
செப்டம்பர் 11 மற்றும் 12 ஆம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வருகிற செப்டம்பர் 11-ஆம் தேதி நடைபெற உள்ள முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வும், 12 ஆம் தேதி இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வும் நடைபெற உள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் மொத்தம் 198 நகரங்களில் நடைபெற உள்ள இந்த தேர்வு, மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. […]
தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடப்பட்டுள்ளது. வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதியிலிருந்து 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.நீண்ட நாட்களுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால்,பள்ளி வகுப்பறைகள்,வளாகங்கள் தூய்மை படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பாக பள்ளிகளை திறப்பதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி, ஒரு வகுப்பில் 20 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி. வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் […]
பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ரேண்டம் எண் இன்று வெளியாகிறது. கொரோனா பரவல் காரணமாக +2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்டனர்.இதனையடுத்து, நடப்பு கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான பணிகளைத் கடந்த ஜூலை 26 ஆம் தேதி தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தொடங்கியது.அந்த வகையில்,பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நேற்றுடன் நிறைவுபெற்றது. இந்நிலையில்,பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்படுகிறது.அதன்படி,பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பக் கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு ரேண்டம் […]
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு ரூ.38.37 கோடியில் 50% மானியத் தொகையை பள்ளிக்கல்வித்துறை இன்று விடுவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பல மாதங்களாக ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. எனினும்,தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்க உள்ளது. இதனால்,அனைத்து ஆசிரியர்களும், பணியாளர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் […]
ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில்(TET)தேர்ச்சி பெறுவோரின் சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லும் என்ற விதி அமலில் இருந்தது. இதனையடுத்து,அந்த சான்றிதழ் ஆயுள்முழுவதும் செல்லும் என்று மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் அறிவித்தது. இந்நிலையில்,ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் செல்லுபடியாகும் காலத்தை ஆயுள்வரை நீட்டித்து உத்தரவிட்டதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.இதன்மூலம்,தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பயன் அடைவார்கள் என்று […]
புதுச்சேரியில் வரும் 1-ம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் மற்றும் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி, கொரோனா தாக்கம் குறைந்ததால் வரும் 1-ம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் மற்றும் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவித்துள்ளார். மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும் என தெரிவித்தார். அனைத்து பள்ளி, கல்லூரி ஆசிரியர்களும் தடுப்பூசி […]
தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் தீவிரமடைந்து வந்த கொரோனா காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. இதனிடையே 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுககள் அனைத்தையும் ரத்து செய்து அரசு அறிவித்தது. இதையடுத்து இந்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை மாதத்தில் வெளியிடப்பட்டது. இதற்கிடையில், கொரோனாவால் 10-ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 10-ஆம் மாணவர்களுக்கான தற்காலிக […]
பிஇ மாணவர் சேர்க்கையில் வேதியியல் பாடம் கட்டாயமில்லை என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. தீவிரமாக பரவிய கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமலேயே உள்ளது. கொரோனா பரவல் இன்னும் முடிவுக்கு வராததால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுமா என்ற சந்தேகம் இருந்த நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் சுழற்சி முறையில் நடைபெறும் என்று தமிழக அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. எனினும்,பொறியியல் […]
வருகின்ற 23-ஆம் தேதி முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் நேற்று அறிவித்துள்ளது. வருகின்ற ஆக.23 ஆம் தேதி முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களுடைய தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும்,இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் இயக்குநர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது,”10 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களுடைய தற்காலிக […]
கொரோனா சூழல் கருதி 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடத்திட்டம் குறைக்கப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 -12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில்,கொரோனா சூழல் கருதி 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடத்திட்டம் குறைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.அதன்படி, 1 முதல் இரண்டாம் வகுப்புக்கு – 50% பாடங்கள் குறைப்பு. 3 முதல் 4 ஆம் […]
செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படலாம் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.இந்நிலையில்,செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படலாம் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும்,சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இது தொடர்பாக அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ” தனியார் பள்ளிகளில் இருந்து 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அரசுப் பள்ளிகளை தேடி வந்துள்ளனர்.எனவே,இடைநிற்றல் இல்லாமல் அவர்களை எப்படியெல்லாம் தக்க […]
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும், இன்று தான் விண்ணப்பிக்க கடைசி நாள். ஒவ்வொரு வருடமும் மே மாதங்களில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் ஆகிய மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனாவால் காரணமாக கடந்த ஆண்டு நீட் நுழைவு தேர்வு தாமதமாக நடத்தப்பட்டது போலவே, இந்த ஆண்டும் சற்று தாமதமாக நீட் தேர்வு நடைபெற உள்ளது. அதன்படி வருகிற செப்டம்பர் 12-ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு […]
கர்நாடக மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. கொரோனா பரவல் காரணமாக பல மாநிலங்கள் உள் மதிப்பீடுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கிய நிலையில்,கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் கடந்த மாதம் 19 மற்றும் 22 ஆம் தேதிகளில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடத்தப்பட்டது. மொழி பாடங்களுக்கான தேர்வு ஒரே நாளிலும், அறிவியல், கணிதம், புவியியல் ஆகிய பாடங்களுக்கு தேர்வு ஒரே நாளிலும் நடந்தது. இந்த தேர்வை 8.76 லட்சம் மாணவர், மாணவிகள் எழுதி இருந்தார்கள். […]
இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கவுள்ள நிலையில், பேராசிரியர்கள் கல்லூரிக்கு வர உயர்கல்வித்துறை உத்தரவு. இன்று முதல் அனைத்து வகை கல்லுாரிகளின் பேராசிரியர்களும், பணியாளர்களும் அனைத்து வேலை நாட்களிலும், நேரடியாக கல்லுாரிக்கு வர வேண்டும் என்றும் அவர்களுக்கான வருகைப் பதிவை பராமரிக்க வேண்டும் எனவும் உயர்கல்வித்துறை முதன்மை செயலர் கார்த்திகேயன் ஆணையிட்டுள்ளார். கல்லூரியில் இருந்தபடி ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டும். கல்லூரிகள், பல்கலைகழகங்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து […]
தேசியக் கல்விக் கொள்கை நடப்பு ஆண்டிலேயே அமலுக்கு வருவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. பள்ளிக் கல்வியிலும்,உயர்கல்வியிலும் சீர்திருத்தங்களை கொண்ட தேசிய கல்விக் கொள்கை திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூலை 29 ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.இதனையடுத்து,அனைவருக்கும் சமமான,தரமான குறைந்த கட்டணத்தில் ஆன கல்வி கிடைப்பதை தேசிய கல்வி கொள்கை உறுதிப்படுத்தும் என பிரதமர் நரேந்திர மோடி முன்னதாக கூறியிருந்தார். ஆனால்,தேசிய கல்வி கொள்கையில் அதிகாரங்கள் மத்திய அரசின் வசம் உள்ளது.இதில் பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட வேண்டும் […]