#BREAKING: புதுச்சேரியில் செப் 1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு – முதல்வர் அறிவிப்பு..!

It has been announced that all the colleges in Pondicherry will be open from the 1st.

புதுச்சேரியில் வரும் 1-ம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் மற்றும் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி, கொரோனா தாக்கம் குறைந்ததால் வரும் 1-ம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் மற்றும் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவித்துள்ளார். மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும் என தெரிவித்தார். அனைத்து பள்ளி, கல்லூரி ஆசிரியர்களும் தடுப்பூசி போட்டுள்ளதை அதிகாரிகள் உறுதி செய்ய நடவடிக்கை.

தமிழக அரசின் பாடத்திட்டத்தை பின்பற்றுவதால் புதுச்சேரியிலும் பள்ளி,கல்லூரிகள் திறக்கப்படுகிறது என தெரிவித்தார். சமீபத்தில் தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.