#Breaking: வருகின்ற 16 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – புதுச்சேரி முதல்வர்..!

Schools to open for 9th to 12th classes from the 16th - Puducherry CM ..!

நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் காரணமாக,ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பள்ளிகள்,கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. எனினும், தற்போது கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அந்தந்த மாநிலங்கள் அறிவித்து வருகின்றன.

இந்நிலையில்,கொரோனா தொற்று குறைந்து வருவதன் காரணமாக புதுச்சேரியில் வருகின்ற 16 ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள்  திறக்கப்பட்டு முதற்கட்டமாக 9 முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி அமைச்சரவைக்கு ஒதுக்கப்பட்ட இலாகாக்கள் தொடர்பான பட்டியலை மாநில துணை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களிடம் ஒப்படைத்த பின்னர் முதல்வர் ரங்கசாமி இந்த அறிவிப்பை தெரிவித்துள்ளார்.

ஆனால்,வகுப்புகள் சுழற்சி முறையில் நடைபெறுமா? என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை.எனினும்,அதற்கான முறையான அறிவிப்பு இன்று மாலை பள்ளிக்கல்வித்துறை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.