மாணவி தற்கொலை வழக்கு : சிபிஐ விசாரணை கோரிய தீர்ப்பு ஒத்திவைப்பு

ஐஐடி மாணவி பாத்திமா மரணம் தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரிக்கக்கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடியில் கேரளாவை சேர்ந்த பாத்திமா லத்தீப்

ஐஐடி மாணவி பாத்திமா மரணம் தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரிக்கக்கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.சென்னை ஐஐடியில் கேரளாவை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.இவரது தற்கொலையில் மர்மங்கள் இருப்பதாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டி வருகின்றனர்.இதனையடுத்து நேற்று  மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.பாத்திமா மரணத்தில் பல சந்தேகங்கள் இருப்பதால் சிபிஐ அல்லது தனி விசாரணை அமைப்பு விசாரிக்க தேசிய மாணவர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுக்கப்பட்டது.இந்த நிலையில் இன்று இந்த வழக்கு மீதான தீர்ப்பை ஒத்திவைப்பதாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.