குட் நியூஸ்..!இனி தமிழ் மொழியில் BE படிக்கலாம்..!

The All India Council of Technology has given permission to study Engineering (BE) subjects in 7 regional languages including Tamil

வருகின்ற கல்வியாண்டு முதல் பொறியியல் (BE) பாடங்களை தமிழ் உள்ளிட்ட 7 பிராந்திய மொழிகளில் படிக்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.

பொதுவாக கல்லூரிகளில் பொறியியல் (BE) பாடங்கள் அனைத்தும் ஆங்கில மொழியில் மட்டுமே நடத்தப்படுகின்றன.இதனால்,பள்ளிகளில் தாய் மொழியில் கல்வி பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் மட்டுமே பொறியியல் படிக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது.

இதன் காரணமாகவே,கிராமப்புற மாணவர்கள் பொறியியல் (BE) படிப்பில் சேர ஆர்வம் காட்டுவதில்லை.இந்நிலையில்,அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்(AICTE),ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது,வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் (BE) பாடங்களை தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட 7 மொழிகளில் படிக்கலாம் என்று அனுமதி அளித்துள்ளது. மேலும்,பொறியியல் பாடங்களை அந்தந்த பிராந்திய மொழிகளில் மொழி மாற்றவும் அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் திட்டமிட்டுள்ளது.

இதன் காரணமாக,ஆங்கிலத்தில் மட்டுமே இதுவரை இடம் பெற்றிருந்த பொறியியல் பாடங்கள் தற்போது தாய் மொழியிலும் இடம்பெறும். அதுமட்டுமல்லாமல், பொறியியல் (BE) பாடங்களை 11 இந்திய மொழிகளில் கொண்டு வரவும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.