டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ், இயங்கும் சட்டக்கல்லூரிகளில் ஒருங்கிணைந்த 5 ஆண்டு சட்டப்படிப்புக்கு சேர விண்ணப்பிக்கும் தேதி வரும் ஜூன் 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியான அறிக்கையில், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற அனைத்து சட்டக்கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் கீழ், இயங்கிவரும் சீர்மிகு சட்டப்பள்ளி ஆகியவற்றில் பயிற்றுவிக்கப்படும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்பிற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூன் 10-ம் தேதி மாலை 05.45 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்www.tndalu.ac.inஎன்ற இணையதளத்தில் சென்று அறியலாம்.
unknown nodeLawAdmission [Image source: @sunnews}
