செப்டம்பர் 30 (September 30) யில் உலகளவில் நிகழ்த்த வரலாற்று சுவடுகளை உங்களுக்காக இணைக்கிறது தினச்சுவடு.
நிகழ்வுகள்
1399 – நான்காம் ஹென்றி இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.1744 – பிரான்ஸ், மற்றும் ஸ்பெயின் இணைந்து சார்டீனியா பேரரசை தோற்கடித்தனர்.1791 – மோட்ஸார்ட்டின் கடைசி ஒப்பேரா வியென்னாவில் அரங்கேறியது.1840 – நெப்போலியன் பொனபார்ட்டின் எஞ்சிய உடல் பகுதி பிரான்சுக்கு எடுத்து வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.1860 – பிரித்தானியாவின் முதலாவது அமிழ் தண்டூர்தி (tram) சேவை ஆரம்பமானது.1867 – ஐக்கிய அமெரிக்கா மிட்வே தீவின் அதிகாரத்தைக் கைப்பற்றியது.1882 – உலகின் முதலாவது நீர்மின் திறன் ஐக்கிய அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில் அமைக்கப்பட்டது.1888 – கிழிப்பர் ஜேக் தனது மூன்றாவது, மற்றும் நான்காவது கொலைகளைச் செய்தான்.1895 – மடகஸ்கார் பிரெஞ்சு பாதுகாக்கப்பட்ட அரசாக அறிவிக்கப்பட்டது.1901 – ஹியூபேர்ட் செசில் பூத் தூசுறிஞ்சிக்கான காப்புரிமம் பெற்றார்.1935 – அரிசோனா, நெவாடா மாநிலங்களுக்கிடையே ஊவர் அணை திறக்கப்பட்டது.1938 – செக்கோசிலவாக்கியாவின் சுடெட்டென்லாந்துப் பகுதியை ஆளும் உரிமையை ஜேர்மனிக்கு வழங்குவதற்கான உடன்படிக்கையில் பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, மற்றும் இத்தாலி ஆகியன அதிகாலை 2:00 மணிக்கு கையெழுத்திட்டன.1938 – “பொதுமக்களின் இருப்பிடங்கள் மீது வேண்டுமென்றே குண்டுத்தாக்குதல்” நடத்தப்படுவது நாடுகளின் அணியினால் தடை செய்யப்பட்டது.1945 – இங்கிலாந்தில் தொடருந்து விபத்தில் 43 பேர் கொல்லப்பட்டனர்.1947 – பாகிஸ்தான், யேமன் ஐநாவில் இணைந்தன.1949 – சோவியத்தினரின் தரைவழித் தடையை அடுத்து மேற்கு ஜெர்மனிக்கு 2.3 மில்லியன் தொன் உணவுப் பொருட்கள் வான்வெளி மூலமாக அனுப்பப்படுவது முடிவுக்கு வந்தது.1965 – இந்தோனேசியாவில் இடம்பெற்ற கம்யூனிஸ்டுகளின் புரட்சியை ஜெனரல் சுகார்ட்டோ முறியடித்து சுமார் ஒரு மில்லியன் கம்யூனிஸ்டுகளைக் கொன்று குவித்தார்.1966 – “பெக்குவானாலாந்து” பிரித்தானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்து பொட்சுவானாக் குடியரசு ஆகியது.1967 – இலங்கை வானொலி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் எனப் பெயர் மாற்றப்பட்டது.1993 – இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் லட்டூர் மற்றும் ஒஸ்மனாபாத் நகரங்களில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.1995 – தமிழகத்தின் திருச்சி மாவட்டத்திலிருந்து பிரித்து கரூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.2001 – இந்தியக் காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மாதவராவ் சிந்தியா விமான விபத்தில் கொல்லப்பட்டார்.2003 – தமிழ் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது.2007 – இந்திய சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மெக்சிகோவில் இடம்பெற்ற உலக சதுரங்கப் போட்டிகளில் வெற்றி பெற்று புதிய உலகச் சாம்பியன் ஆனார்.
பிறப்புகள்
1207 – ரூமி, பாரசீகக் கவிஞர் (இ. 1273)1550 – மைக்கேல் மாயிஸ்ட்லின், செருமானிய வானியலாளர் (இ. 1631)1870 – சான் பத்தீட்டு பெரென், இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு-அமெரிக்கர் (இ. 1942)1928 – எலீ வீசல், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ரோமானிய-அமெரிக்கர்1931 – எம். ஏ. எம். ராமசாமி, தொழிலதிபர், அரசியல்வாதி (இ. 2015)1941 – கமலேஷ் சர்மா, இந்தியக் கல்வியாளர்1964 – மோனிக்கா பெலூச்சி, இத்தாலிய நடிகை1980 – மார்டினா ஹிங்கிஸ், சுவிசு டென்னிசு ஆட்டக்காரர்1986 – மார்ட்டின் கப்டில், நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர்
இறப்புகள்
2004 – காமினி பொன்சேகா, சிங்களத் திரைப்பட நடிகர் (பி. 1936)2008 – ஜே. பி. ஜெயரத்தினம், சிங்கப்பூர் அரசியல்வாதி (பி. 1926)
DINASUVADU