ஆந்திரா ஸ்பெஷல் பாகற்காய் உள்ளி காரம் அசத்தலான செய்முறை இதோ..!

ஆந்திரா ஸ்டைலில் பாகற்காய் உள்ளிக்காரம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

ulli karam (1)

சென்னை :ஆந்திரா ஸ்டைலில் பாகற்காய் உள்ளிக்காரம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

தேவையான பொருட்கள்;

பாகற்காய்- 250 கிராம்

கடலைப்பருப்பு- ஒரு ஸ்பூன்

உளுந்து -ஒரு ஸ்பூன்

கொத்தமல்லி -ஒரு ஸ்பூன்

சீரகம்- ஒரு ஸ்பூன்

காய்ந்த மிளகாய்- 7

பெரிய வெங்காயம்-மூன்று

பூண்டு -ஆறு பள்ளு

புளி -எலுமிச்சை அளவு

எண்ணெய் -6 ஸ்பூன்

மஞ்சள் தூள்- 1/2 ஸ்பூன்.

unknown node

செய்முறை;

முதலில் பாகற்காயை கழுவி வட்ட வடிவில் நறுக்கி  அதில் இருக்கும் விதைகளையும் நீக்கி விட்டு அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு கலந்து 30 நிமிடங்கள் தனியாக வைத்து விட வேண்டும். இப்போது ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கொத்தமல்லி விதைகள் ,உளுந்து, சீரகம், கடலைப்பருப்பு ,வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து வறுத்து பிறகு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி  ஆற வைத்து புளி சேர்த்து மிக்ஸியில்  அரைத்துக் கொள்ளவும்.

unknown node

இப்போது கடாயில் ஏழிலிருந்து எட்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் பாகற்காயை புழிந்து  விட்டு எண்ணெயில் சேர்த்து பொரித்து வறுக்க வேண்டும் . இப்போது நாம் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதையும் அதனுடன் சேர்த்து 15 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும். நன்கு வெந்து எண்ணெய் பிரிந்து வந்த பிறகு பாகற்காயை இறக்கினால் சுவையான ஆந்திரா ஸ்டைல் உள்ளிக்காரம் தயாராகிவிடும்.