சுவையான வாழைக்காய் கூட்டு செய்வது எப்படி?

நமது வீடுகளில் நாம் சமையல் செய்யும் போது, ஒரு குழம்பு வைத்து, ஏதாவது ஒரு கூட்டு செய்வது வழக்கம். தற்போது இந்த பதிவில் சுவையான வாழைக்காய் கூட்டு செய்வது எப்படி

நமது வீடுகளில் நாம் சமையல் செய்யும் போது, ஒரு குழம்பு வைத்து, ஏதாவது ஒரு கூட்டு செய்வது வழக்கம். தற்போது இந்த பதிவில் சுவையான வாழைக்காய் கூட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

வாழைக்காய் – 1

பாசிப்பருப்பு – கால் கப்

மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி

மிளகு, சீரகத்தூள் – அரை தேக்கரண்டி

அரிசி மாவு – ஒரு தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

அரைக்க

தேங்காய் – கால் மூடி

பச்சை மிளகாய் – 3

தாளிக்க

நறுக்கிய வெங்காயம் – பாதி

சோம்பு தூள் – அரை தேக்கரண்டி

கடுகு, சீரகம், கருவேப்பிலை, எண்ணெய்

செய்முறை

முதலில் வாழைக்காயை கழுவி தோல் நீக்கி நறுக்கி துவர்ப்பை எடுக்க உப்பு தண்ணீரில் 10 னிடம் ஊற விட வேண்டும். பின் பாசிப்பருப்பை குக்கரில் வேக வைத்து கொள்ள வேண்டும். தேங்காய், பச்சை மிளகாயை விழுதாக அரைத்து வைக்க வேண்டும்.

பின் ஒரு வாயகன்ற பாத்திரத்தில், வாழைக்காயை போட்டு, மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு போட்டு ஒன்றாக கலந்து 15 நிமிடம் ஊற விட வேண்டும். அதனுடன் வேக வைத்த பருப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும்.

பின் அதில் அரைத்த தேங்காய் விழுது, அரிசி சேர்த்து ஒரு கொதிவிட வேண்டும். பின் தாளிக்க வேண்டியவற்றை தாளித்து சேர்க்க வேண்டும். இப்பொது சுவையான வாழைக்காய் கூட்டு தயார்.