நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான புதினா சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
புதினா – ஒரு கட்டு
கோதுமை மாவு – ஒரு கப்
சோளமாவு – ஒரு பங்கு
இஞ்சி – சிறிதளவு
பூண்டு – 10 பல்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
தயிர் – அரை கப்
வெல்லம் – 2 டேபிள் ஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் புதினாவை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதனுடன் இஞ்சி, பூண்டு மற்ரரும் சிறிது உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் மாவுடன் தயிர், வெல்லம், எண்ணெய், புதினா, இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய் தூள், சீரகம் ஆகியவற்றை சேர்த்து பிசைந்து 2 ஊற வைக்க வேண்டும். பின் சிறு சிறு உருண்டைகளாக எடுத்து, சப்பாத்தி கட்டையில் தட்டி எடுத்து, கடாயில் போட்டு சுட்டெடுக்க வேண்டும். இப்பொது சுவையான புதினா சப்பாத்தி தயார்.