வாழைப்பூ நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இத அதிகமானோர் சாப்பிட விரும்புவதில்லை. ஆனால். இதில் நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளது. இது நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவது மட்டுமல்லாமல், பல நோய்களையும் குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது.
unknown nodeவாழைப்பூவில் துவர்ப்புசத்து அதிகம் உள்ளது. அதனால் வாழைப்பூவை சாப்பிட்டு வந்தால் நமது தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். வாழைப்பூவில் உள்ள துவர்ப்பு சத்துகளால் நமது உடலில் உள்ள பல வியாதிகள் குணமாகும்.
இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் :
வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க கூடியது. இரத்தம் சுத்தமாகின்றது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கின்றது.
unknown nodeஇரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்துகின்றது. இதனால் இரத்தத்தில் ஆக்சிஜன் வாயு அதிகரிக்கிறது. உடலுக்கு தேவையான இரும்புச்சத்தை கொடுக்கிறது. இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமலும் தடுக்கிறது.
சர்க்கரை நோய் :
unknown nodeசர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளை கரைத்து வெளியேற்ற வாழைப்பூ உதவுகிறது. இதனால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது. வாழைப் பூவை அதிக அளவில் உணவில் சேர்த்து வந்தால் வயிற்று புண்கள் ஆறும். செரிமானத்தன்மை அதிமாகும்.
வாய்ப்புண் :
unknown nodeமூலநோயினால் பாதித்தவர்களுக்கும், மலத்துடன் இரத்தம் வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலப் புண்கள் இவற்றுக்கு சிறந்த மருந்தாக வாழைப்பூ பயன்படுகிறது. வாழைப்பூ மலச்சிக்கலை போக்கும். சீதபேதியையும் கட்டுப்படுத்தும். வாய்ப்பு புண்ணை விரைவில் ஆற்றும் தன்மை உடையது.
கருப்பை கோளாறுகள் :
unknown nodeவாழைப்பூவை உணவில் சேர்த்து வந்தால் பெண்களுக்கு உண்டாகும் கருப்பை கோளாறுகள். மாதவிலக்கு காலங்களில் அதிக இரத்தப்போக்கு அல்லது இரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்கள் விரைவில் குணமாகும்.