10 நாட்கள் தொடர்ந்து சீரக-இஞ்சி நீரை குடித்தால் தொப்பை உடனே குறையும்..! தயாரிக்கும் முறை உள்ளே

This article is about How jeera-ginger drink helps to cut tummy within 10 days. Read on-தொடர்ச்சியாக சீரக-இஞ்சி நீரை குடித்தால், 10 நாட்களில் தொப்பை குறையும்..!

தொப்பையினால் அவதிபடுவோர் அதிகமாக உள்ளனர். பத்தில் 5 பேருக்கு தொப்பை இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என ஆராய்ச்சிகள் சொல்கின்றன. கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுதல், ஒரே இடத்தில் நாள் கணக்கில் உட்கார்ந்திருத்தல், உடற்பயிற்சி இன்மை இது போன்ற காரணிகள் தான் தொப்பைக்கு முக்கிய காரணமாக உள்ளது.

இதற்கு தீர்வே இல்லையா என்று ஆவலாக இருக்கும் உங்களுக்கான, தீர்வை இஞ்சியும் சீரகமும் தருகிறது. இதை தொடர்ந்து குடித்து வந்தால் மிக எளிதாக தொப்பையை குறைத்து விடலாம். மேலும், இதனால் பல்வேறு பயன்களும் கிடைக்கின்றன. அவை என்னென்ன என்பதை இனி அறியலாம்.

unknown node

சீரகத்தின் பயன்கள்பொட்டாசியம், இரும்புசத்து, நார்சத்து, வைட்டமின் சி, ஈ, கே போன்ற பலவித ஊட்டச்சத்துக்கள் சீரகத்தில் உள்ளதாம். சமையலில் இதன் பங்கு மிகவும் இன்றியமையாததாகும். உணவில் தனியாக சீரகத்தை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகளை விட பல மடங்கு இதன் ஆற்றல் இஞ்சியுடன் சேரும் போது அதிகரிக்கும்.

unknown node

இஞ்சியின் பயன்கள்இந்திய உணவின் மிக முக்கிய இடம் இஞ்சிக்கு எப்போதுமே உண்டு. இஞ்சியை உணவில் சேர்த்து கொண்டால் ஏராளமான பயன்கள் கிடைக்கும். வெறும் இஞ்சியை சாப்பிடுவதை விட சீரகத்தோடு சேர்த்து சாப்பிட்டால் இதன் பலன்மேலும் உயரும் என ஆயுர்வேத குறிப்புகள் சொல்கின்றன.

unknown node

தேவையான பொருட்கள்1 ஸ்பூன் சீரகம்1 இஞ்சி500 மி.லி தண்ணீர்1 ஸ்பூன் எலுமிச்சை சாறுஅரை ஸ்பூன் ஏலக்காய் பொடி

unknown node

தயாரிக்கும் முறைமுதலில் நீரை கொதிக்க விட்டு அதனுள் சீரகம், நறுக்கிய இஞ்சி ஆகியவற்றை சேர்க்கவும். 500 மி.லி நீர் 250 மி.லி வரும் வரை இதை கொதிக்க விடவும். பிறகு இதனை இறக்கி கொண்டு எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம். தேவைக்கு சிறிது ஏலக்காய் சேர்த்து கொள்ளலாம்.

unknown node

எவ்வாறு வேலை செய்கிறது?இந்த நீரை தினமும் காலையில் குடித்து வந்தால் தொப்பை 10 நாட்களுக்குள் குறையும். கூடுதலாக உடல் எடையும் இதனால் குறைந்து விடும். உடலில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்புகளும் இந்த நீரால் கரைந்து வெளியேறி விடும். எதிர்ப்பு சக்தி குறைபாடு கொண்டோருக்கு இது சிறந்த தீர்வாக இருக்கும்.