கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த 250 பா.ஜா.காவை சேர்ந்தவர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் மிகவும் மோசமாகி கொண்டே செல்லும் நிலையில், இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அதிகமாக கூட்டம் கூட கூடாது எனவும் போலீசார் கண்டித்து வருகின்றனர்.
இந்நிலையில், யூ டியூப் சானலில் கறுப்பர் கூட்டம் எனும் உபயோகர்கள் ஆபாச கந்தசஷ்டி புராணம் எனும் வீடியோக்கள் வெளியிட்டதை எதிர்த்து 250 பா.ஜா.கவினர் கூட்டமாக நடத்திய போராட்டத்தால் அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மேல் ஊரடங்கு நேரத்தில் கூட்டம் கூடியது உட்பட 3 வழக்குகள் பதிவாகியுள்ளது.