கோவையில் இன்று மேலும் ஒரு யானை உயிரிழப்பு..! 8 மாதங்களில் 17 யானைகள் உயிரிழப்பு.!

கோவை போளுவாம்பட்டி வனசரகத்திற்கு உட்பட்ட பகுதியில் 12 வயது மதிக்கதக்க பெண் யானை உடல் நலக்குறைவால் சோர்வடைந்து நடக்கமுடியாமல் இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து,

கோவை போளுவாம்பட்டி வனசரகத்திற்கு உட்பட்ட பகுதியில் 12 வயது மதிக்கதக்கபெண்யானைஉடல் நலக்குறைவால் சோர்வடைந்து நடக்கமுடியாமல் இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து, வனத்துறை மருத்துவக்குழுவினர் குளுக்கோஸ் ஏற்றி மருத்துவ சிகிக்சை கொடுத்தனர்.

கடந்த 3 நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பெண்   யானை சிகிக்சை பெற்று வந்தது. இந்நிலையில், இன்று  சிகிச்சை பலனின்றி அந்த பெண் யானை உயிரிழந்தது. கோவையில் கடந்த 8 மாதங்களில் மட்டும் இதுவரை 17 யானைகள் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளன என்பது குறிப்பித்ததக்கது.