செங்கல்பட்டில் மேலும் 35 பேருக்கு கொரோனா உறுதி, மொத்தம் 391ஆக உயர்வு !

செங்கல்பட்டில் மேலும் 35 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டில் மேலும் 35 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று மட்டும் 716 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 8,718 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் 8 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2135ஆக அதிகரித்துள்ளது. தற்போது 6,520 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில், செங்கல்பட்டில் நேற்று மட்டும் 35 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் செங்கல்பட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 391 ஆக உயர்ந்துள்ளது. இதில் 320 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.