தந்தை ,மகன் உயிரிழந்த வழக்கு – பாலகிருஷ்ணன்  ஜாமீன் மனு மீது இன்று விசாரணை

காவல் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன்  ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.

காவல் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன்  ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் காவல்துறை தாக்கியதில் உயிரிழந்த தந்தை, மகன் விவகாரத்தில், நடைபெற்ற விசாரணையில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள்  ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.ஆனால் இவர்களை  சிபிஐ காவலில் விசாரிக்க கோரி மதுரை முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.சிபிஐ-யின் கோரிக்கையை ஏற்று 16-ஆம் தேதி விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதற்கு இடையில்  தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில்  காவல் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன்  ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு  மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.