தமிழகத்தில் 90,000-ஐ நெருங்கும் குணமானோர் எண்ணிக்கை. இன்று மட்டும் 3,617 பேர் குணமடைந்தனர்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,244 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,34,226லிருந்து 1,38,470 ஆக அதிகரித்துள்ளது. இன்று தமிழ்கத்தில் 69 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று சென்னையில் மேலும் 1,168 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 46,969 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இன்று மட்டும் 3,617 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 85,915 லிருந்து 89,532 ஆக அதிகரித்துள்ளது. நாளை 90,000 நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
unknown node