#BREAKING: தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு இலவச சிகிச்சை -முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!

The government will pay for the treatment of coronary heart disease in a private hospital.

கொரனோ பாதிப்புக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தால் அதன்  கட்டணத்தை அரசே ஏற்கும்.

இன்று காலை ஆளுநர் மாளிகையில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற நிலையில், பின்னர் முன்னாள் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து, தலைமைச் செயலகம் வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு  காவல்துறை அணிவகுப்பு அளிக்கப்பட்டது.

#BREAKING: 5 முக்கிய கோப்பில் கையெழுத்திட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின்..!

பின்னர், முதல்வர் இருக்கையில் அமர்ந்த மு.க. ஸ்டாலின் 5 முக்கிய கோப்பில் கையெழுத்திட்டர். அதில், ஒன்றாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் கட்டணத்தை முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் தமிழக அரசே ஏற்கும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.