ஆளுநர், அமித்ஷா குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அமித்ஷா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அதேபோல் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது இல்லத்தில் தொடர் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார்.
இந்நிலையில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குறித்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது முதல் பதிவில், எங்கள் அன்புக்குரிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜிக்கு விரைவாக குணமடைய விரும்புகிறேன். விரைவில் குணமடைந்து உங்கள் பொது சேவையைத் தொடர வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
unknown nodeமற்றொரு பதிவில், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோஹித் அவர்கள் விரைவில் குணமடைந்து, பூரண நலம் பெற எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
unknown node