Today’s Live: கல்லூரிகளில் 7 நாட்களும் மாணவர் சேர்க்கை.!

LIVE NEWS

மாணவர் சேர்க்கை:

பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

19.05.2023 1:17AM

முழு பலத்தை எட்டிய உச்சநீதிமன்றம்:

உச்சநீதிமன்ற நீதிபதிகளாக ஆந்திர பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த பிரசாந்த் குமார் மிஷ்ரா, தமிழ்நாட்டைச் சேர்ந்தமூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன் இன்று பதவியேற்பு. இவர்கள் இருவரின் பதவியேற்பை தொடர்ந்து, அதன் முழு பலமான உச்சநீதிமன்றம் இப்பொது 34 நீதிபதிகளை பெற்றுள்ளது .

19.05.2023 12:30 AM

வீடு தேடி வரும் கோயில் பிரசாதம்:

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் பிரசாதங்களை இந்தியா முழுவதும் பக்தர்களின் வீடுகளுக்கே அஞ்சல் மூலம் அனுப்பும் திட்டம் முதற்கட்டமாக 48 முதுநிலை கோயில்களில் தொடங்கப்பட்டது. இதற்கு பிரசாதத்திற்கான கட்டணம் மற்றும் அஞ்சல் தொகை வசூலிக்கப்படுகிறது. அடுத்த 3 மாதங்களில் உலகம் முழுவதும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துளளார்.

19.05.2023 09:11 AM

பெட்ரோல் – டீசல் விலை:

363-ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் சென்னையில் இன்று காலை நிலவரப்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 க்கும் விற்பனையாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

19.05.2023 08:21 AM

பாஜக செயற்குழு கூட்டம்:

கோவையில் இன்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த செயற்குழு கூட்டத்தில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தவுடு, சிடி ரவி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

19.05.2023 07:40 AM

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்:

இன்று வெளியாகிறது 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிறது. அதன்படி, இன்று காலை 10 மணிக்கு 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும், பிற்பகல் 2 மணிக்கு 11-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதிய மாணவர்கள் http://tnresults.nic.in , http://dge.tn.nic.in ஆகிய இணையதளத்தில் மதிப்பெண் விபரங்களை தெரிந்துகொள்ளலாம்.

19.05.2023 6:10 AM

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்